சுகாதார பிரிவு அலுவலர்கள் 3 பேர் இடமாற்றம்


சுகாதார பிரிவு அலுவலர்கள் 3 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 18 Oct 2023 12:30 AM IST (Updated: 18 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சியில் சுகாதார பிரிவு அலுவலர்கள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகரின் பொதுசுகாதார நிர்வாகம் நலன்கருதி 3 சுகாதார பிரிவு அலுவலர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தச்சநல்லூர் மண்டல சுகாதார அலுவலர் சாகுல்அமீது நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தின் (எம்.சி.சி.) கண்காணிப்பு அலுவலராகவும், நெல்லை மண்டல சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தச்சநல்லூர் மண்டல சுகாதார அலுவலர் கூடுதல் பொறுப்பாகவும், பாளையங்கோட்டை சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் பாளையங்கோட்டை சுகாதார அலுவலர் கூடுதல் பொறுப்பாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான ஆணையை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பிறப்பித்து உள்ளார்.


Next Story