சேலம் மாவட்டத்தில் 25 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


சேலம் மாவட்டத்தில்  25 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x

சேலம் மாவட்டத்தில் 25 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் 25 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி வரும் மலர்விழி வீரபாண்டிக்கும், தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா ேசலத்துக்கும், வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் முருகன் கொளத்தூருக்கும், வீரபாண்டியில் பணியாற்றிய அன்புராஜன், ஏற்காட்டிற்கும், சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகணேஷ் வீரபாண்டிக்கும், பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் கொளத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த 25 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளார்.


Next Story