சேலம் சரகத்துக்கு 24 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவு
சேலம் சரகத்துக்கு 24 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்
சேலம்;
கோவை மேற்கு மண்டலத்தில் 48 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய ஆனந்த், விக்னேஸ்வரன், நீலகிரி நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சண்முகசுந்தரன் உள்பட 8 இன்ஸ்பெக்டர்கள் சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் 16 பேர் சேலம் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் அவர்கள் பணியாற்ற கூடிய போலீஸ் நிலையம் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story