24 துணை தாசில்தார்கள் பணி இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 துணை தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் துணை தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சின்னசேலம் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வந்த ராஜா சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் உளுந்தூர்பேட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் தவமணி கள்ளக்குறிச்சி தரணி சுகர்ஸ் துணை தாசில்தாராகவும், உளுந்தூர்பேட்டை மண்டல துணை தாசில்தார் பாண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக எச் பிரிவு தலைமை உதவியாளராகவும், சங்கராபுரம் மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக ஜி பிரிவு தலைமை உதவியாளராகவும், இவர்கள் உள்பட மொத்தம் 24 துணை தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ளார்.