சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சூதாட்டம்:ஊரக வளர்ச்சித்துறையில் 17 டிரைவர்கள் இடமாற்றம்


சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சூதாட்டம்:ஊரக வளர்ச்சித்துறையில் 17 டிரைவர்கள் இடமாற்றம்
x

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையில் 17 டிரைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் அலுவலக வளாகத்தின் பின்புற பகுதியில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகளின் வாகனங்களை அதன் டிரைவர்கள் நிறுத்திவிட்டு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு போலீசார் சென்றபோது, அவர்களை பார்த்தவுடன் டிரைவர்கள் அங்கிருந்து தப்பிஓட்டம் பிடித்த சம்பவம் நடந்தது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் அரசு வாகனங்களின் டிரைவர்கள் 17 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, டிரைவர்கள் ராமலிங்கம், பழனி, சத்தியமூர்த்தி, ராஜா, கோவிந்தராஜ், கணேசன், முரளிதரன், சபரிசங்கர், கார்த்திகேயன், கேசவகுமார், சம்பத்குமார், இம்ரான்பாஷா, தங்கவேல் உள்பட 17 டிரைவர்களை பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story