12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; கலெக்டர் உத்தரவு


12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் கடையத்துக்கும், ஆலங்குளத்தில் இருந்து விஜயலட்சுமி வாசுதேவநல்லூருக்கும், கடையத்தில் இருந்து ராஜசேகரன் தென்காசிக்கும், மேலநீலிதநல்லூரில் இருந்து வேலம்மாள் சங்கரன்கோவிலுக்கும், வாசுதேவநல்லூரில் இருந்து கணேசன் ஆலங்குளத்துக்கும், சங்கரன்கோவிலில் இருந்து அருள்செல்வம் மேலநீலிதநல்லூருக்கும், தென்காசியில் இருந்து குழந்தைமணி கீழப்பாவூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலைக்குமார் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (நிர்வாகம்), தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மாணிக்கவாசகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) திலகராஜ், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன், மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (நிர்வாகம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (நிர்வாகம்) மாற்றப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.


Next Story