நெல்லையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு


நெல்லையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு
x

நெல்லையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது

திருநெல்வேலி

நெல்லையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது.

கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைெபற்றது. காலை 11 மணிக்கு கலந்தாய்வு இணையவழி மூலம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 36 இடங்களுக்கு வருவதற்காக 50-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஆசிரிய, ஆசிரியைகள் நேற்று காலை 10 மணி அளவில் வந்து காத்திருந்தனர்.

அவர்களுக்கு உரிய கலந்தாய்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையில் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கலந்தாய்வு தாமதமாக தொடங்கியது.

போராட்டம் நடத்த முயற்சி

இதற்கிடையே மறுகால்தலை தொடக்கப்பள்ளி ஆசிரியர் பாபு என்பவர் கலந்தாய்வு நடந்த பகுதிக்கு வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பாபுவை பிடித்து வெளியே அழைத்து சென்றனர்.

அப்போது அவர் கூறுகையில், ''கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கலந்தாய்வில் எனக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை ரத்து செய்து விட்டு, பழைய இடத்திலேயே நியமிக்க வேண்டும்'' என்றார்.

அவருடன் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில துணைத்தலைவர் ஜான் துரைசாமியும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.


Next Story