படிக்கும் போதே புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் பயிற்சிகள் பள்ளிகளில் தொடங்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
படிக்கின்ற காலத்திலேயே புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தினார்.
சென்னை,
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை தமிழ்நாடு அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பள்ளி, கல்லூரி என படிக்கின்ற காலத்திலேயே புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்லூரியில் தொடங்கியுள்ள திட்டம் பள்ளிகளிலும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story