மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் 'காஸ்மெட்டிக்' சார்ந்த பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி
மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் ‘காஸ்மெட்டிக்' சார்ந்த பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி சென்னையில் நாளை நடக்கிறது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது. அந்தவகையில் சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ ஆடிட்டோரியத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து லோன் மேளா மற்றும் காஸ்மெட்டிக் தொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் காஸ்மெட்டிக் பயிற்சியாக ஆலுவேரா ஜெல், லிப் சீரம், லிப் பாம், டேன் ரிமூவல் சோப் ஆகிய பொருட்களை தயாரிப்பது எப்படி? என்பது பற்றியும், பேக்கிங், மார்க்கெட்டிங் செய்யும் விவரங்களும், அதற்கான மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களும் சிறப்பு பயிற்சியாளரைக் கொண்டு அளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 9361086551, 7871702700 என்ற எண்களுக்கு குறுந்தகவல் மூலம் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.