எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி


எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:49 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களகுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

பேராவூரணியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடர்பான வட்டார அளவிலான பயிற்சி நடந்தது.

இந்த பயிற்சியில் பேராவூரணி வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் 95 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பில் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆங்கில விரிவுரையாளர் சுபாஷ் சந்திரபோஸ் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டு உரை நிகழ்த்தினார்.

கையேடு

3 நாட்கள் நடந்த இந்த பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் அங்கையற்கண்ணி, கலாராணி, வட்டாரவள மைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் மாநில, மாவட்ட கருத்தாளர்கள் கலந்து கொண்டு, பல்வேறு கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.


Next Story