சிறுதானிய பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சிறுதானிய பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ஆலத்திப்பள்ளம் கிராமத்தில் சிறுதானியப்பயிர்கள் சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தார். கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் திருமலைவாசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார். இதில் சிறுதானியங்களில் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி, நுண்சத்து இடுதல், அங்கக முறையிலான பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மகேஷ்குமார், ஆரோக்கியராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.