எண்ணும், எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி
திட்டச்சேரி அரசு பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி
நாகப்பட்டினம்
திட்டச்சேரி;
திருமருகல் ஒன்றியத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை கலாராணி, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 ஆசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சந்தானம், ஆசிரியர் பயிற்றுனர்கள் துர்கா, பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story