அரசுப்பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுக்கு பயிற்சி


அரசுப்பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுக்கு பயிற்சி
x

அரசுப்பணியாளர் தேர்வாணைய ேபாட்டி தேர்வுக்கான பயிற்சியை மணிப்பூர் போலீஸ் டி.ஐ.ஜி வழங்கினார்.

விருதுநகர்

அரசுப்பணியாளர் தேர்வாணைய ேபாட்டி தேர்வுக்கான பயிற்சியை மணிப்பூர் போலீஸ் டி.ஐ.ஜி வழங்கினார்.

பயிற்சி வகுப்பு

விருதுநகரில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் மணிப்பூர் மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இம்மாவட்டத்தை சேர்ந்த ஹபீப் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என பயிற்சி அளித்தார்.

தேர்வுக்கான பாடத்திட்டத்தினைபுரிந்து அதற்கான புத்தகங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் புத்தகங்களில் முக்கியமான பகுதிகளை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிக நேரம் புத்தகம் வாசித்தலில் செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போட்டித்தேர்வு

நேர மேலாண்மை மிகவும் முக்கியம். போட்டித்தேர்வு எழுதும் போது அவசரம் மற்றும் பதட்டம் இன்றி தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் தான் அகில இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.


Next Story