காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள்
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதன்மை பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

பயிற்சி வகுப்புகள்

குடும்பத்தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிளான முதன்மை பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்களை எவ்வாறு கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக, செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும் முகாம் நடைபெறும் நாளன்று, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன், கொண்டுவர வேண்டிய ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்குப் புத்தகம், மின்சார வாரிய கட்டண இரசீது மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை அசலாக சரிபார்த்து விண்ணப்பங்களை கைப்பேசி செயலி வழியே பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

செங்கல்பட்டில்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இல்லம் தேடி கல்வி பணியாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுமக்களிடம் இருந்து எப்படி விவரங்களை வாங்க வேண்டும் அவற்றை எவ்வாறு கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனா, உதவி கலெக்டர் (பயிற்சி) அபிலாஷ் கவுர், மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது.


Next Story