தேசிய பேரிடர் மீட்புப் படை மைய வளாகத்தில் வீரர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்


தேசிய பேரிடர் மீட்புப் படை மைய வளாகத்தில் வீரர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
x

தேசிய பேரிடர் மீட்புப் படை மைய வளாகத்தில் வீரர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

தேசிய பேரிடர் மீட்புப் படை மைய வளாகத்தில் வீரர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜி20 மாநாடு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் பேரிடர் காலங்களில் அணு கதிர் வீச்சு விபத்துகள் ஏற்படும் போது மீட்பு பணியில் செயல்படுவதற்கான திறனை வளர்ப்புக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பேரிடர் மீட்புப் படையின் கமாண்டண்ட் டி.ஐ.ஜி. அகிலேஷ் குமார் தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமையக தகவல் தொடர்பு பிரிவு டி.ஐ.ஜி. மொக்சென் ஷெகத்தி இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மும்பை பாபா அணு சக்தி ஆராய்ச்சி நிலைய அவசர கால தயார் நிலை மற்றும் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் விஞ்ஞானி முரளி கலந்து கொண்டு அணுக்கதிர் வீச்சின் தன்மைகள், அதன் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கும் சிறப்பம்சங்களை செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார். இதில் ஆந்திரா, ஓடிசா, பிகார் மாநிலங்களில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story