பயிற்சி முகாம்


பயிற்சி முகாம்
x

தெற்கு விஜயநாராயணத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி ஒன்றியம் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையார் சௌந்தர்ராஜன் மேற்பார்வையில் நடைபெற்றது.

கருத்தாளர்களாக வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் டேனியல், செல்வி, ஜெனட், ஜெயந்தி, மேரிலதா, மரியதாஸ், முத்துச்செல்வன், நல்லக்குமார் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையாக கற்பிப்பது மாணவர்களை கற்றலில் திறம்பட செயல்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை நாங்குநேரி வட்டார கல்வி அலுவலர்கள் ஜெபஸ்தியாயி, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story