Normal
கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி
கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி
நாமக்கல்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலதுறை சார்பில் அடுத்த மாதம் (ஜூன்) 6, 7, 8 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் வேளாண்மை சார்ந்த இடங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை மூலம் விவசாயிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர். விருப்பம் உள்ள கபிலர்மலை வட்டார விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதில் இருக்கூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story