தனியார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மூடல்


தனியார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மூடல்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:30 AM IST (Updated: 3 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே தனியார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மூடப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள பகுதியில் தனியார் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகளை ஜீப் மூலம் ஏற்றிக்கொண்டு குளிக்க அழைத்து செல்வதாகவும், அவ்வாறு செல்லும் போது டிரைவர்கள் வாகனத்தை வேகமாக இயக்குவதால் சில விபத்துக்கள் ஏற்படுவதாகும் புகார்கள் வந்தன.

இந்த நிலையில் தென்காசி உதவி கலெக்டர் லாவன்யா தலைமையில் செங்கோட்டை தாசில்தார் முருகு செல்வி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குண்டாறு பகுதியில் இருக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் இரும்பு கதவுகளை வைத்து மூடியுள்ளனர். மேலும், தனியார் நீர்வீழ்ச்சிகள் என்ற பெயரில் சுற்றுலா பயணிகளை கட்டாயப்படுத்தி அதிக கட்டண வசூல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.


Next Story