அம்மாபேட்டை அருகே பிறந்த 9-வது நாளில் சோகம்பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை திடீர் சாவு
அம்மாபேட்டை அருகே பிறந்த 9-வது நாளில், பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை திடீரென உயிரிழந்தது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே பிறந்த 9-வது நாளில், பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை திடீரென உயிரிழந்தது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 நாட்களுக்கு...
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி நத்தமேட்டை சேர்ந்தவர் பிரபு. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சகுந்தலா தேவி (வயது 21) இவருக்கு ஏற்கனவே ஸ்ரீ மகா என்று 3 வயது பெண் குழந்தை உள்ளது.
கடந்த 9 நாட்களுக்கு முன்பு சகுந்தலா தேவிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தையுடன் வீட்டிலிருந்த சகுந்தலா தேவி நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணி அளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு வெளியில் துணி துவைக்க சென்று விட்டார். பின்னர் குழந்தை தூங்குகிறது என நினைத்துவிட்டு வீட்டு வேலைகளை செய்து வந்தார்.
சாவு
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் குழந்தை எழுந்திருக்காததால், அதன் அருகே சென்று பார்த்து உள்ளார். அப்போது குழந்தை அசைவு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை ஒலகடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை பால் கொடுத்ததால் மூச்சு திணறி இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணத்தால் இறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த 9-வது நாளில் பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.