கூகுள் மேப்பால் விபரீதம்... சென்னையில் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்


கூகுள் மேப்பால் விபரீதம்... சென்னையில் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்
x

கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்த பெண் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னையில் அதிகாலை வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்த பெண் ஏற்றி இறக்கியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில் இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர் வீட்டின் முன்புள்ள சாலையில் உறங்கியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாக காரில் வந்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வைஷாலி என்ற பெண் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த சாலை முட்டு சந்து என்று தெரியாமல் சென்ற வைஷாலி, வழி இல்லாமல் காரை நிறுத்தவே அவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிவந்ததாக அவர், தெரிவித்த நிலையில், மதுபோதையில் காரை ஓட்டி வந்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story