வாகனங்களை அனுமதிக்காததால் போக்குவரத்து நெருக்கடி
வாகனங்களை அனுமதிக்காததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தனுஷ்கோடி,
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதி அரிச்சல் முனை வரை செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை வளைவில் நின்று கடல் அழகை பார்வை யிட்டு திரும்பி செல்கின்றனர். இந்த நிலையில் தனுஷ் கோடிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலை வளைவு வரை அனுமதிக்கப்படாமல் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சாலை வளைவுக்கு வாகனங்கள் செல்லாத வகையில் சாலையை மறைத்து காவல்துறை மூலம் தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரிச்சல்முனை சாலை பகுதியில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து கடும் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையும் இணைந்து அரிச்சல் முனை வரும் அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சாலை வளைவில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.