காட்பாடி ரெயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது


காட்பாடி ரெயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
x

சீரமைப்பு பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில் காட்பாடி ரெயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.

வேலூர்,

பழுதடைந்த காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் வகையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பணிகள் தற்போது முழுமையாக முடிவுற்றதையடுத்து பாலத்தின் மீது போக்குவரத்து சோதனை ஓட்டம் நடத்தி அதன் தன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் இன்று முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இயங்க மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது . சரக்கு வாகனங்களை பாலத்தின் மீது இயக்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் நேற்று தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதையொட்டி பாலத்தின் மீது இருசக்கர வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தற்போது பணிகள் நிறைவு பெற்ற நிலையில் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் இன்று திறந்து வைத்தார் .இதன் மூலம் மீண்டும் சீரமைப்பு பணிகள் முடிந்து வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story