புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அம்பையில் புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
அம்பை:
அம்பை மெயின் ரோட்டில் சந்தை அருகில் ஒரு பாலமும், அதன் அருகில் மற்றொரு பாலமும் அமைக்கும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாலப்பணிகள் முடிவுற்றதால் போக்குவரத்து தொடங்கியது. நேற்று காலையில் அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் விஷ்ணுவர்தன், மணிமுத்தாறு முன்னாள் நகரப்பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாலத்தில் போக்குவரத்தினை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து தி.மு.க. சார்பில் அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி. பிரபாகர பாண்டியன், நகராட்சி துணை தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி போக்குவரத்தினை தொடங்கி வைத்தனர்.