மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்- கேரள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர்- கேரள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரம் சரிந்து விழுந்தது
கூடலூரில் இருந்து தேவர்சோலை, பிதிர்காடு, பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு சூசம்பாடி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் கூடலூர்- கேரளா சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மின்வாள்கள் கொண்டு மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.