விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள்


விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள்
x

விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விருதுநகர்

ராஜபாளையம்.

விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

பாரம்பரிய நெல் விதைகள்

ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சீரக சம்பா, கருப்புகவுனிஅரிசி உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அ்ப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் மகிழ்ச்சியாக சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.

விவசாயிகளுக்கு மானியம்

விவசாயத்தையும், விவசாயிகளின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு விவசாயக்கடனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். மேலும் விவசாய பொருட்கள் அனைத்தையும் மானியத்தில் வழங்கி வருகிறார்.

இந்தியாவிலேயே விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டது நமது தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தான். அவரை தமிழக மக்களும், விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை துணை இயக்குனர் பத்மாவதி, வேளாண்மைத்துறை அதிகாரிகள் திருமலைச்சாமி, தனலட்சுமி, கவுன்சிலர் பூமாரி, நிர்வாகிகள் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story