விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படுவதாக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி பாரம்பரிய நெல் விதைகளான செங்கல்பட்டு சிறுமணி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, தூயமல்லி ஆகிய நெல் விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ மட்டும் வழங்கப்படும். ஒரு கிலோ நெல்லின் விலை ரூ.50. அது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளதால் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் இதனை வாங்கி பயனடையலாம் என வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story