வணிகர்கள் கடையின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும்


வணிகர்கள் கடையின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும்
x

வணிகர்கள் கடையின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அறிவுறுத்தினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி 2 நாட்கள் நடந்தது. இதனை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தொடங்கி வைத்தார்.

ஆட்சிமொழி பயிலரங்கில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் தமிழ் அறிஞர்கள் பலர் பயிற்சி அளித்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு முத்துரங்கம் கலைக்கல்லூரி முதல்வர் மலர், பேராசிரியர்கள் அன்பு, மோனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வைஅருள் தலைமை தாங்கி பேசுகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு 125 விருதுகளுக்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் நிறுவனம், கடையின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பம் இடுவதுடன் அனைத்து கடித போக்குவரத்தையும் தமிழிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ப.நாகராசன் செய்திருந்தார்.


Next Story