முக்கூடலில் வியாபாரிகள் கடையடைப்பு


முக்கூடலில் வியாபாரிகள் கடையடைப்பு
x

முக்கூடலில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடலில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. முக்கூடலிலேயே சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, முக்கூடல் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி முக்கூடலில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story