வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்


வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
x

நெல்லை டவுனில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் மீரான், துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். கூட்டத்தில், நெல்லை மாநகர பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொது மக்கள் செல்ல முடியாத அளவுக்கு புழுதி பறக்கிறது. எனவே சாலைகளை சுத்தப்படுத்தி புழுதிகளை அப்புறப்படுத்துவதுடன், விரைவில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை செயலாளர் பகவதிராஜன் நன்றி கூறினார்.


Next Story