வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
நெல்லையில் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நெல்லையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் அதிபர்கள் டி.பி.வைகுண்டராஜா, கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நெல்லை ரத வீதிகளில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறைகளை உடனே திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். பாதாள சாக்கடை, கழிவுநீர் ஓடைகளை உடனே சீரமைக்க வேண்டும். நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை உடனே திறக்க வேண்டும். அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ்நிலையத்திற்கு சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.ஆர்.குணசேகரன், நயன்சிங், வெங்கடேஷ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.