வியாபாரிகள் சங்க ஆண்டு விழா


வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 42-வது ஆண்டு விழா ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவருமான ரவி தலைமை தாங்கினார். வணிகர் சங்க பேரவையின் மாநில செயல் தலைவர் பா.விநாயகமூர்த்தி, மாநில பொதுச்செயலர் ராஜா, மாவட்ட செயலர் செந்தமிழ்செல்வன், பொன்ராஜ், துரைசிங், தமிழரசன், லிங்கம், அரசகுமார், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வேல்ராஜன் சங்க ஆண்டறிக்கையையும், பொருளாளர் சுந்தர் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனர்.

கூட்டத்தில், உடன்குடி மெயின் பஜாரில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள புறக்காவல் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும், வியாபாரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உடன்குடி வாரச்சந்தையை தினசரி சந்தையாக மாற்ற பேரூராட்சி நிர்வாகத்தை கேட்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஏராளமான வியாபாரிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், உடன்குடி கனரா வங்கி கிளை மேலாளர் தெய்வநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story