கார் மோதி வியாபாரி பலி


கார் மோதி வியாபாரி பலி
x

சாணார்பட்டி அருகே கார் மோதி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள கொசவப்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ் (வயது 55). இவர், கொசவப்பட்டியில் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று காலை இவர், திண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று விட்டு கொசவப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-நத்தம் சாலையில் நொச்சியோடைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.

அப்போது நத்தத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி எதிரே வந்த கார், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேசுராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story