காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை


காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
x

காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அப்பாராவ் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 33). இவர் பினாயில், சோப்பு, விற்பனை செய்து வந்தார். இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஸ்ரீநதி, கவிஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராஜி மனமுடைந்து, வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராஜியின் மனைவி யுவராணி பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story