தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்
x

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம், ஜூன்.15-

தனியார் ரெயில் இயக்கத்தை கண்டித்து அரக்கோணம் ரெயில் நிலைய பிளாட் பாரத்தில் சென்னை கோட்ட டி.ஆர்.ஈ.யூ.வின் கூடுதல் செயலாளர் புகழும் பொன்னையா தலைமையில் ரெயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவையிலிருந்து சீரடி வரை இயக்கப்படும் தனியார் ரெயில் இயக்கத்தை கண்டித்தும், இந்த சேவையை ரெயில்வே துறையே இயக்க வலியுறுத்தியும் தொழிற்சங்க ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story