வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவனுக்கு வர்த்தக சங்க தலைவர் பாராட்டு
சர்வதேச கராத்தே போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவனுக்கு வர்த்தக சங்க தலைவர் பாராட்டு
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் வர்த்தக சங்க உறுப்பினர் கோபாலகிருஷ்ணனின் மகன் ராஜசேகர். வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் பாயிண்ட் கலிமியர் பள்ளியில் படித்து வரும் ராஜசேகர், மலேசியாவில் நடைபெற்ற கராத்தே-குமிட்டி பிரிவு போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றார். அதைதொடர்ந்து வேதாரண்யம் வந்த மாணவன் ராஜசேகரனுக்கு, வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், மாநில துணைத்தலைவருமான தென்னரசு கைக்கடிகாரம் வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். இதில் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், அரிவையார் சங்க முன்னாள் தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
Related Tags :
Next Story