சிவகிரியில் இருந்து கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கம்


சிவகிரியில் இருந்து கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கம்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் இருந்து கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கப்பட்டது.

தென்காசி

சிவகிரி:

அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக சிவகிரி தாலுகா அலுவலகத்தில் இருந்து சிவகிரி பஸ்நிலையம், வாசுதேவநல்லூர், புளியங்குடி வழியாக கடையநல்லூர் தாலுகா அலுவலகம் வரை புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என சிவகிரியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் முதல்-அமைச்சரின் ஆணைப்படி புதிய வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்கான தொடக்க விழா நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தனுஷ். குமார் எம்.பி., டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி தலைவி கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு, வாசுதேவநல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் சந்திரமோகன், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கார்த்திக், சிவகிரி பேரூராட்சி பணி நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், புளியங்குடி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மாடசாமி, செயலாளர் பூவைய்யா, பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ண லீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story