ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருப்பத்தூர்

ஏலகிரி மலை

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டினரும் சுற்றுலா வந்து செல்கின்றனர்.

ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுறறுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில் சனி, ஞாயிறு மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதன் காரணமாக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடனும், உறவினர்கள், நண்பர்களுடனும் படையெடுத்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்தனர். நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்கும் விடுதியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்க முடியாமல் திரும்பி சென்றனர்.


Next Story