குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி
குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலத்தில் நேற்று சாரல் மழை பெய்யவில்லை. வெயில் அடித்தது. நேற்று முதல் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பிவிட்டன. நேற்று பழைய குற்றாலம் அருவியில் அதிகமான சுற்றுலா பயணிகள் காலையிலிருந்து குவிய தொடங்கினர். அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story