குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. சாரல் மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே குற்றாலத்தில் கடுமையான வெயில் காணப்படுகிறது. இருந்த போதிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று அனைத்து அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் காலை முதலே படையெடுக்க தொடங்கினர். குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை நெருங்கி சீரான அளவு தண்ணீர் விழுந்தது. இதே போன்று பழைய குற்றாலம் அருவி மற்றும் மெயின் அருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. நுழைவு வாயில் பகுதி முதல் அருவிக்கரை வரையில் ஆயிரக்கணக்கானோர் குளிப்பதற்காக குவிந்து காத்திருந்தனர்.

சுதந்திர தின பாதுகாப்பு பணிக்காக போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்றதால் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


Next Story