குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளது. சாரல் மழை இல்லை. வெயில் அடிக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகமாக காணப்பட்டது. நேற்று அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி குளிக்க செய்தனர்.


Next Story