அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 13 May 2023 6:45 PM (Updated: 13 May 2023 6:46 PM)
t-max-icont-min-icon

கோடை வெப்பத்தை தணிக்க அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

கோடை வெப்பத்தை தணிக்க அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், இது ஒரு ஆன்மீக அருவியாக இருப்பதாலும் இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கத்திரி வெயில் தொடங்கி கோடையின் வெப்பம் அதிகரித்து வருவதால் கோடை வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று அகஸ்தியர் அருவிக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது கார் மற்றும் வேன்களில் குவிந்தனர்.

தொடர்ந்து அகஸ்தியர் அருவியில் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் ஆனந்த குளியலிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை சுற்றுலா பயணிகள் தணித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பாபசாசம் வனச் சோதனை சாவடியில் இருந்து பாபநாசம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.


Next Story