கல்லணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது


விடுமுறை நாளையொட்டி கல்லணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகத்துடன் குளித்து மகிழந்தனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

விடுமுறை நாளையொட்டி கல்லணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகத்துடன் குளித்து மகிழந்தனர்.

கல்லணை

சுற்றுலா தலமாக விளங்கும் கல்லணையில் விடுமுறை நாளான நேற்று மக்கள் கூட்டம் அதிகம் அளவில் காணப்பட்டது. காவிரி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இதனால் நேற்று காலை முதல் மாலை வரை கல்லணைக்கு வந்த மக்கள் ஆர்வத்துடன் காவிரி ஆற்றின் பாலத்தின் அருகே உள்ள மதகுகளின் அருகில் சென்று குளித்து மகிழ்ந்தனர்.

கூட்டம் அலைமோதியது

சிறுவர் பூங்காவில் உள்ள உபகரணங்களில் சிறுவர், சிறுமிகள் உற்சாகத்துடன் விளையாடினர். வெண்ணாற்றில் புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியில் பாதுகாப்பான முறையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குளித்தனர்.

கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம் கொள்ளிடம் ஆற்றின் பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாகனங்களில் வந்ததால் கல்லணை பாலங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுத்தனர்.


Next Story