குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்
விடுமுறை நாளான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
விடுமுறை நாளான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
களை கட்டிய சீசன்
குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
உற்சாக குளியல்
நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலையில் இருந்தே ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளுக்கும் சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தற்போது குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசி ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து சீசனை அனுபவித்து செல்கின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குளிக்கும் இடத்திலும் போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.