ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருப்பத்தூர்

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர். பெரும்பாலானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளிலும் கூட்டம் அலைமோதின.

செயற்கை நீர்வீழ்ச்சி

கூட்டம் காரணமாக படகு இல்ல சாலையிலும், நேற்று வீடு திரும்பிய போதும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி திரையரங்கு, இயற்கை பூங்காவில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story