ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
3 நாள் தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
3 நாள் தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏலகிரி மலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. மலைக்கு செல்லும் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.
எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏலகிரி மலைக்கு வந்தனர்.
சுற்றுலா பயணிகள்
அவர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். இங்குள்ள படகு துறையில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் படகில் சவாரி செய்தும், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறுவர் பூங்கா அருகே உள்ள வைல்டு தீம் பார்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செயற்கை அருவியில் குளித்தும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர்.
இதனால் ஏலகிரி மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயனிகளாக காட்சியளித்தனர்.