வார விடுமுறைையயொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறைையயொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வாரவிடுமுறைையயொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதிலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி வாரவிடுமுறையையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அவர்கள் கார், சுற்றுலா வேன், பஸ்களில் வந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் நகரை ஒட்டியுள்ள சுற்றுலா இடங்களையும், அருவி, நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். அதன்படி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், வெள்ளி நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

இதேபோல் மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்தனர்.



Next Story