குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கும். அப்போதும் அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனால் கூட்டம் குறைவாக இருக்கும். பின்னர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் இங்கு வந்து செல்வார்கள்.

கடந்த சில நாட்களாக அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இல்லாததால் அருவிகளில் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள். தற்போது கடும் வெயில் அடிப்பதால் அருவிகளில் குளிர்ந்த நீர் இதமாக இருப்பதால் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.


Next Story