கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவை குற்றால அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி, அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது.
இந்த நிலையில், கோவை குற்றால அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று குறைந்தது. இதனால் அருவிக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 2 மாதங்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story