ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

39 நாட்களுக்கு பின் ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன்காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கடந்த மாதத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8,000 கன அடியாக குறைந்த நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்பாக குளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 39 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story