ஏரியில் குதித்து சுற்றுலா பயணி தற்கொலை முயற்சி


ஏரியில் குதித்து சுற்றுலா பயணி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 6 Nov 2022 1:00 AM IST (Updated: 6 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் ஏரியில் குதித்து சுற்றுலா பயணி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

ஏற்காடு:-

ஏற்காட்டில் ஏரியில் குதித்து சுற்றுலா பயணி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுலா பயணி

சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37), சுற்றுலா பயணியான இவர் கடந்த 3 நாட்களாக ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் ஏற்காடு படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்து கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென கார்த்திக் ஏரிக்குள் குதித்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த படகு ஓட்டிகள் கூச்சலிட்டனர். உடனே கரையில் இருந்த படகு இல்ல பணியாளர்கள் விரைந்து சென்ற கார்த்திக்கை பத்திரமாக மீட்டனர்.

சுற்றுலா பயணி ஏரியில் குதித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவரை காப்பற்றிய ஊழியர்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

ஏற்காட்டில் ஏரியில் குதித்து சுற்றுலா பயணி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து படகு இல்ல மேலாளர் கோபி, சுற்றுலா பயணி கார்த்திக்கின் வீட்டிற்கு தகவல் கொடுத்து அவர்களை வரவைத்தார். பின்னர் கார்த்திக்கை குடும்பத்தினருடன் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதே நேரத்தில் குடிபோதையில் இருந்த நபரை படகு இல்லத்திற்குள் அனுமதித்தது ஏன்? எனவும் அவரை படகு சவாரி செய்ய அனுமதித்தது ஏன்? எனவும் படகு இல்ல மேலாளரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

---


Next Story